பிரபல நடிகையை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட ரஜினி.. லதா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு..

By vinoth on மாசி 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

80 களில் ரஜினிகாந்த் கதாநாயகனாக அசுர வேகத்தில் வளர்ந்து வந்த போது அவரை பற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. ஒருமுறை மதுரை விமான நிலையத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக அவர் பற்றி சர்ச்சைகள் எழுந்தன. அதன் பின்னர் அவரின் குருநாதர் பாலச்சந்தர் அறிவுரை செய்ததாலும், திருமணம் செய்து கொண்டதாலும் அவர் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார்.

   

திருமண வாழ்க்கையில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையான ரஜினிகாந்த் 80 களின் இறுதியில் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட முடிவெடுத்துள்ளதாக அப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.  இது ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   

அதற்குக் காரணம் அப்போது அவரோடு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அமலாவை அவர் காதலிப்பதாகவும், அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் சொல்லப்பட்டது.

 

அப்போதும் ரஜினியின் குருநாதர் பாலச்சந்தர் உள்ளிட்ட ரஜினியின் நெருங்கிய வட்டாரத்தினர் அவரை அழைத்து “சினிமாவில் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள். இப்போது இதுபோல சர்ச்சையில் சிக்கினால் சினிமா மார்க்கெட் ஆட்டம் கண்டுவிடும்” என எச்சரித்து அறிவுரை சொல்லியுள்ளனர்.

அதன் பிறகே அவர் மனம் மாறியதாகவும் சொல்லப்பட்டது. பின்னர் ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் காட்ட ஆரம்பித்துள்ளார். நண்பர்கள் சொன்னது போலவே ரஜினியின் மார்க்கெட் 90 களில் உச்சம் தொட்டது. அதன் பிறகு நடிகை அமலாவும் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.