அஜித்தை கமலுக்கு பிடிக்காமல் போக இதுதான் காரணமா..? பிரபலம் பகிர்ந்த தகவல்..

By Archana on மார்கழி 1, 2023

Spread the love

நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தான் அவர்களின் கெரியரை தொடங்கினார்கள். ஆரம்ப காலத்தில் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், அஜித் உலக நாயகன் கமல்ஹாசனையும் தான் பின்பற்றி வந்துள்ளார்கள். ஆனால் தற்போது இது அப்படியே உல்ட்டாவாக மாறிவிட்டது. அதாவது விஜய் கமல்ஹாசனுடனும், அஜித் ரஜினியுடனும் நெருங்கி பழகி வருகிறார்கள்.

   

இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “ஆரம்ப காலத்தில் அஜித் கூட ஒருமுறை பேட்டி ஒன்றில் நடிப்பு ரீதியாக உலக நாயகன் கமல் சாரை தான் பிடிக்கும் என கூறியிருந்தார். ஆனால் சில காரணங்களால் கமலுக்கு அஜித்தை பிடிக்காமல் போய்விட்டது. தற்போது வரை என்ன காரணம் என தெரியவில்லை.

   

 

அதன் பின் கமல் அஜித்தை வெறுக்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் தான் விஜய்யை கமலுக்கு பிடித்து போக பல மேடைகளில் விஜய் அமைதியாக இருக்கிறார் என்று நினைக்காதீர்கள் அவர் அமைதியாக இருந்து கொண்டே சாதித்து விடுவார் என கமல் கூறி வந்தார். அதேபோல் மறுபுறம் ரஜினிகாந்த் அஜித்தை அழைத்து அறிவுரை வழங்கினார். மேலும் ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீமேக்கில் கூட அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதே ரஜினி தான்” என கூறியுள்ளார்.