சத்தமே இல்லாமல் படத்தின் பூஜையை முடித்த படக்குழு… விஜய் சேதுபதி- மிஷ்கின் படத்தின் டைட்டில் இதுதானா..?

By Begam on மார்கழி 1, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார். ஹீரோவாக முதலில் கலக்கி வந்த இவர் தற்போது வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு போல் மாறி நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கின்றார்.

   

தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துவரும் இவர் பான் இந்தியா நடிகராக மாறி இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காத்து வாக்குல இரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், கடைசி விவசாயி, விடுதலை, விக்ரம், ஜவான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

   

 

இதில் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்பொழுது இவர் வில்லன், ஹீரோ என இரண்டு கதாபத்திரங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.  இந்த நிலையில் இன்று விஜய்சேதுபதி – மிஷ்கின் இணையும் ஒரு புதிய படத்திற்கான பூஜை மிக எளிதாக சத்தமில்லாமல் நடைபெற்றிருக்கிறது.

இந்தப் படத்திற்கு ‘ட்ரையின்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. தற்பொழுது பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வில்லனாக அவதாரத்தை முடித்து விட்டு தற்பொழுது ஹீரோவாக கலக்க வரும் அவரின் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.