8000 கோடி சொத்து… யார் இந்த வருண் மணியன்?… திரிஷாவுடனான காதல் முறிந்தது ஏன்?.. திருமணத்திற்கு முன் போட்ட அந்த ஒரு கண்டிஷன் பிரிவுக்கு இதுதான் காரணமா?…!!!

By Rajeshwari on பங்குனி 9, 2026

Spread the love

பிரபல தென்னிந்திய நடிகை திரிஷாவின் முன்னாள் வருங்கால கணவரான வருண் மணியன், தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளார். சென்னையைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபரான இவர், சுமார் 8000 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட ஒரு பெரும் மல்டி மில்லியனர் ஆவார்.

மேலும் 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரிஷா மற்றும் வருண் மணியன் இடையே மிக விமரிசையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், அந்த நிச்சயதார்த்தம் சில மாதங்களிலேயே எதிர்பாராத விதமாக முறிவடைந்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   

இதனால் திரிஷா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கக் கூடாது என்று வருண் மணியன் குடும்பத்தினர் நிபந்தனை விதித்ததாகவும், ஆனால் தனது நடிப்புத் தொழிலைத் தொடர வேண்டும் என்பதில் திரிஷா உறுதியாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

   

இந்த கருத்து வேறுபாடே அவர்களது பிரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடிகர் விஜய் மற்றும் திரிஷாவைச் சுற்றி எழுந்துள்ள பல்வேறு வதந்திகளுக்கு மத்தியில், திரிஷாவின் கடந்த கால உறவுகள் குறித்து இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளதால் வருண் மணியனின் பெயர் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது.