எடுக்குறது கிராமத்துப் படம்… அப்புறம் ஏன் பாரதிராஜா படத்துல எல்லா ஹீரோயினும் வெள்ளையா இருக்காங்க- ரசிகரின் கேள்விக்கு பிரபலத்தின் பதில்!

By vinoth on ஆடி 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுவே அவரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. முதல் பட ஹிட் கொடுத்த போது ஏதோ அதிர்ஷ்டத்தில் வென்றதாக பலரும் சொன்னார்கள். ஆனால் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிப் படங்களாகக் கொடுத்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

   

பாரதிராஜா என்னதான் கிராமத்துப் படங்களாக எடுத்தாலும், அவர் அறிமுகப்படுத்திய அல்லது தன் படங்களில் நடிக்கவைத்த ஹீரோயின்கள் பெரும்பாலானோர் வெள்ளையாக அழகாக இருப்பார்கள். ஒரு கிராமத்துப் பெண் இப்படியா இருப்பார் என்று ரசிகர் ஒருவர் சினிமா பத்திரிக்கையாளரும், பாரதிராஜாவின் முன்னாள் உதவி இயக்குனருமான சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார்.

   

அதற்கு சித்ரா லட்சுமணன் அளித்த பதிலில் ”எல்லா கிராமத்துப் பெண்களும் சிகப்பா அழகா இருக்க மாட்டாங்க என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் கிராமத்துப் பெண்கள் கருப்பாதான் இருப்பாங்கன்னும் சொல்ல முடியாது. நானே நிறைய வெள்ளையான கிராமத்துப் பெண்களைப் பார்த்திருக்கேன். அப்படிப்பட்ட பெண்களை பாரதிராஜா தன்னோட படத்துக்கான கதாநாயகியாக கற்பனைப் பண்ணிருப்பாருன்னு நெனச்சுக்குங்களேன்.” என்று பதிலளித்துள்ளார்.

 

என்னதான் வெள்ளையான பெண்களை நடிக்க வைத்தாலும், அவர்களை மேக்கப் மூலமாக கிராமத்துப் பெண்கள் போலவே மாற்றி நடிக்கவைத்துவிடுவார் என்பதுதான் பாரதிராஜாவின் பலம்.