நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது இயக்கத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார். நடிகர் தனுஷ் தனது 50-வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்தும் இருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திர பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கின்றார்.
படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த திரைப்படத்திற்கு மிக பிளஸ் பாயிண்டாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். படம் வெளியானது முதலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆகமொத்தம் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தனுஷ் சாதித்து காட்டிவிட்டார்.

சமீப நாட்களாக ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டி வரும் நடிகர் தனுஷ், அடிக்கடி பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றார், படம் வெளியாவதற்கு முன்னதாக குலதெய்வம் கோயிலுக்கு சென்று வந்த தனுஷ் தற்போது படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதால் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று இருக்கின்றார்.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலுக்கு தனது மகன்களுடன் சென்றிருந்த தனுஷ் கையில் ருத்ராட்ச மாலை உடன் பிரகாரத்தை சுற்றிவந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கிருந்த பூசாரிகளுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

நடிகர் தனுஷ் திருவண்ணாமலை கோயிலுக்கு வந்திருக்கின்றார் என்பதை கேட்ட ரசிகர்கள் பலரும் அங்கு குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் அனைத்தையும் சரி செய்து நடிகர் தனுஷை சாமி தரிசனம் செய்வதற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
