தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.
அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.
90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். தீனா படம்தான் அவரை முழுமையாக ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. அதன் பின்னர் அவர் நடித்த அனைத்துப் படங்களும் ஆக்ஷன் மசாலாப் படங்கள்தான். இந்த ஆண்டில் அவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்கள் ரிலீஸாகவுள்ளன.
இதற்கிடையில் அவர் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். அதற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். சமீபகாலமாக அஜித் மிகவும் அதிக உடல் எடை அதிகமாகக் காணப்பட்டார். இதன் காரணமாக அவரை பாடி ஷேமிங் செய்யும் பதிவுகளும் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகின.

இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரும் அஜித்தோடு நெருங்கி பழகியவருமான பிஸ்மி அஜித்துக்கு உடல் எடை ஏறியதற்கானக் காரணம் என்ன என்பது பேசியுள்ளார். அதில் “அஜித்துக்கு ஒரு விபத்து நடந்து அதில் முதுகுத்தண்டில் அடிபட்டது. அதனால் அவர் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து ஏராளமான மாத்திரைகளை எடுத்துக் கொண்டார். அதில் சில மாத்திரைகள் ஸ்டீராய்டுகள். அதன் காரணமாக அவர் உடல் எடை ஏறியது. அந்த ஸ்டீராய்ட் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்தினால் அவருக்கு வலி அதிகரிக்கும் என்பதால் அவரால் அதை தவிர்க்க முடியவில்லை.”எனக் கூறியுள்ளார்.
