இப்பதான் மீடியாக்கள சந்திக்குறது இல்ல.. ஆனா அப்போ வேற மாதிரி – பத்திரிக்கையாளர் இறந்த போது அஜித் செய்த நெகிழ வைக்கும் செயல்!

By vinoth on மாசி 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றுள்ள வசூல் மன்னன்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் அஜித். அமராவதியில் ஆரம்பித்த அவரின் திரைப் பயணம் இன்று விடாமுயற்சியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. முதலில் காதல் படங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் தீனா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார்.

அஜித் தன்னுடைய சினிமா கேரியரில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். முதலில் அவர் சில காதல் கிசுகிசுக்களில் சிக்கி படங்களில் கவனம் செலுத்துவதில்லை என புகார்கள் எழுந்தன. அதன் பின்னர் அவர் கார் ரேஸ்களில் ஆர்வம் காட்டுகிறார். அவரை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு இதனால் ரிஸ்க் ஏற்படுகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

   

   

இடையில் அவர் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையைக் கிளப்ப, அதன் பிறகு அவர் மீடியாக்களை சந்திப்பதை படிப்படியாக குறைத்தார். அசல் படத்துக்கு பின்னர் சுத்தமாக அவர் மீடியாக்களை சந்தித்தார். அவரை பார்க்க வேண்டும் திரையரங்கிலும் ஏர்போட்டிலும் மட்டுமே பார்க்க முடியும் என்ற சூழல் உருவானது.

 

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான அந்தனன் அஜித்தைப் பற்றி பலரும் அறியாத தகவலை ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “அஜித் இப்போதுதான் மீடியாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். முன்பெல்லாம் அவர் அள்வுக்கு பத்திரிக்கையாளர்களோடு நெருக்கமாக இருந்த நடிகர் யாருமே இல்லை.

ஒருமுறை சந்துரு என்ற பத்திரிக்கையாளர் இறந்த போது அவரின் உடல் வீட்டுக்கு வருவதற்குள் அங்கு அஜித் வந்து நின்றார். அவரின் உடலை ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி வீட்டுக்கு எடுத்து சென்ற நான்கு பேரில் அஜித்தும் ஒருவர். அப்படி இருந்த அஜித்தான் இப்போது இப்படி மாறிவிட்டார். அஜித்தின் இந்த மாற்றத்துக்கு ரஜினிதான் காரணம். அவர்தான் அஜித்திடம் மீடியாக்களை சந்திக்காதீர்கள் எனக் கூறிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.