ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு குடும்பமே தண்ணீர் டேங்க்கில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் பாரமர் மாவட்டத்தை சேர்ந்த சிவ்லால் மேக்வால்(35) என்பவருக்கு கவிதா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் டேங்க்கில் குதித்து குடும்பமே தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்வதற்கு முன்பு கவிதா தன்னுடைய இளைய மகன் ராமதேவ் (8) என்பவருக்கு பெண்களின் உடையை அணிவித்து அவனது தலையில் துப்பட்டாவை பொருத்தி கண்களில் மை பூசி தன்னுடைய தங்க நகைகளை அணிவித்து அழகு பார்த்து உள்ளார்.
பிறகு தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது சிவ்லால் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கி உள்ளது. அந்த கடிதத்தில் மூன்று பேர் குடும்பத்தின் இந்த முடிவுக்கு காரணம் என்றும் அதில் தனது இளைய சகோதரரும் ஒருவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலம் மற்றும் வீட்டின் உரிமை தொடர்பாக பல ஆண்டுகளாக நடந்த சண்டைகள் தான் தற்கொலைக்கு காரணம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனி வீடு கட்டுவதற்கு தாங்கள் விரும்பியதாகவும் இதற்கு அவரது தாயும் சகோதரியும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கவிதாவின் மாமா கூறியுள்ளார். சம்பவத்தன்று குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் வெளியே இருந்த நிலையில் தொலைபேசிகளை அணைத்துவிட்டு குடும்பமே இந்த முடிவை எடுத்துள்ளனர். மொத்த குடும்பமும் தண்ணீர் டேங்கில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், நேற்று காலை அறை எடுத்துத் தங்கிய இளம்…
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மனின் உண்மையான பெயர் 'தடாதகை' என்பதாகும். மலையத்துவஜ பாண்டிய மன்னனின் யாகத்தில் மூன்று மார்புகளுடன்…
சின்னத்திரையில் 'கனா காணும் காலங்கள்' மூலம் அறிமுகமாகி, தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வரும் ஹரிப்பிரியா, தனது தனிப்பட்ட…
தமிழகத்தின் மூத்த அரசியல் ஆளுமையும், முன்னாள் அமைச்சருமான 99 வயது டாக்டர் எச்.வி. ஹண்டே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில்…
மார்கஸ் வெஸ்ஸன் (Marcus Wesson) எனும் கொடூர மனிதனின் இந்தச் செயல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தையே உலுக்கிய ஒரு கருப்பு…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய 'கோல்ட் கார்டு' (Gold Card) விசா திட்டத்தில், இதுவரை…