அதிமுக + திமுக + தவெக..! சி.விஜயபாஸ்கர் மீண்டும் ‘ஹாட்ரிக்’ அடிப்பாரா..? பரபரப்பு கருத்துக்கணிப்பு..!!

By Soundarya on சித்திரை 7, 2026

Spread the love

விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் ‘மணியார்’ செய்தி நிறுவனம் நடத்திய சமீபத்திய தேர்தல் கருத்துக்கணிப்பில், அதிமுக முதலிடத்தைப் பிடித்து மீண்டும் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது. இத்தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நான்காவது முறையாக அதிமுக சார்பில் களமிறங்கியுள்ளார். அவருக்குப் போட்டியாக திமுக சார்பில் கே.கே.செல்லபாண்டியன் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளில் திமுக இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. சுமார் 2.23 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், குறிப்பிட்ட அளவிலான மக்களிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின்படி அதிமுகவே தற்போதைய நிலையில் முன்னிலையில் உள்ளது.

இத்தேர்தலில் புதிதாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மூன்றாவது இடத்தைப் பிடித்து கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான நேரடிப் போட்டியில், த.வெ.க கணிசமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. விஜயபாஸ்கரின் தனிப்பட்ட செல்வாக்கும், தொகுதியில் அவர் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளும் அதிமுகவின் இந்த முன்னிலைக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. எனினும், தேர்தல் நெருங்கும் வேளையில் மற்ற கட்சிகளின் தீவிரப் பிரச்சாரம் இந்த நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.