சீக்ரெட் ஃபைல்கள் ஓபன்… குவாரி அதிபர்களுக்கு இனி ஆப்பு…. அரசியல் வட்டாரத்தை உலுக்கப்போகும் ‘வெள்ளை அறிக்கை’… கனிமவளத் துறையின் ரகசிய மூவ்….!

By Nanthini on ஆடி 7, 2026

Spread the love

கடந்த ஆட்சிக்காலங்களில் குவாரிகளில் விதிகளை மீறி கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் அரசுக்கு ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் மற்றும் அரசியல் தலையீடுகளால் அபராதத் தொகைகள் முறைகேடாகக் குறைக்கப்பட்டது குறித்து கனிமவளத் துறை தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த முறைகேடுகள் மற்றும் இழப்புகள் குறித்த அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய விரிவான “வெள்ளை அறிக்கை” ஒன்றை வெளியிட இத்துறை தற்போது முழுவீச்சில் தயாராகி வருவதால், விரைவில் இந்த அறிக்கை வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.