“தமிழ்நாட்டில் ‘விசில் புரட்சி’ வெடிச்சிருக்கு” – தவெக அரசைப் பாராட்டிப் பேசிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்..!!

By Soundarya on ஆனி 18, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர், பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன் முறைப்படி தொடங்கியுள்ளது. ‘வணக்கம்’ எனத் தமிழில் தனது உரையைத் தொடங்கிய ஆளுநர், கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் பெருமளவில் அதிகரித்துள்ளதாகக் கவலை தெரிவித்தார். மேலும், கடந்த கால ஆட்சி போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கப் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இனி வரும் காலங்களில் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒடுக்க இந்தத் தவெக அரசு மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், டாஸ்மாக் நிர்வாகத்தில் நிலவி வந்த ஊழல் முறைகேடுகள் தடுக்கப்பட்டு, அதன் மூலம் திரட்டப்படும் நிதியானது தற்போது முறைப்படி அரசு கஜானாவிற்குத் திருப்பப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டார். நிதி பகிர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இழைக்கும் அநீதிகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து விரைவில் ஒரு விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தவெக அரசு அமைந்திருப்பதை “விசில் புரட்சி” எனப் பாராட்டிய ஆளுநரின் இந்த உரை, தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.