“நடிகர் திலகமுனா சும்மாவா…” அமெரிக்கா தெருக்கூத்து… பாடி அசத்திய சிவாஜி கணேசன்… “மூச்சு வாங்குதா மாமா?”… ஆசையாக கொஞ்சிய மனைவி… இணையத்தை கலக்கும் வீடியோ…!

By Visaka on ஆடி 26, 2026

Spread the love

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அரிதான மற்றும் நெகிழ்ச்சியூட்டும் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதய நோய் பாதிப்புடன் இருந்த காலத்தில் அமெரிக்காவில் உள்ள தனது மருமகன் வீட்டில் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்ட இந்த காட்சியில், அங்குள்ளவர்கள் முன் மேஜையில் தாளம் தட்டியபடியே தெருக்கூத்து பாடலை அவர் பாடி அசத்துகிறார். அவரது கம்பீரமான குரலையும், கலை மீதான ஈடுபாட்டையும் கண்டு அங்கிருந்தவர்கள் வியந்து ரசிக்கும் தருணம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

பாடலைப் பாடி முடித்தவுடன் அருகில் நின்றிருந்த அவரது மனைவி கமலா அம்மா, “மூச்சு வாங்குதா மாமா?” என்று பேரன்போடும் வாஞ்சையோடும் கேட்கும் காட்சி பார்ப்போரின் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. சினிமாவில் தனது உலகத்தரமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் திலகத்தின் இந்த தனிப்பட்ட வாழ்க்கை தருணம், இணையத்தில் தற்போது சென்சேஷனலாகி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.