தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் விளங்கும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது 26-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகரின் வழியைப் பின்பற்றி ஹீரோவாக களமிறங்குவதற்குப் பதிலாக, இயக்குநராக திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களின் வாழ்த்துக்களை மழையாகப் பொழிந்து வருகின்றனர்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சந்தீப் கிஷன் நடிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் வரும் ஜூலை 31-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பிஸியாக இயங்கி வரும் முதல்வர் விஜய், தனது மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய்க்குப் பொதுவெளியில் அல்லது சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துத் தெரிவித்துள்ளாரா என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் தற்போது அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
