அஜித் குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகராவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனது உழைப்பு மற்றும் விடாமுயற்சியினால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஆகியிருக்கிறார். கார் ரேசிங்கில் ஈடுபட்டு வந்த அஜித்குமார் அவ்வப்போது மாடலிங்கும் செய்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1990களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித்குமார் காதல் மன்னன், காதல் கோட்டை, வாலி, அமர்க்களம், பூவெல்லாம் உன் வாசம், வில்லன், வரலாறு, கிரீடம், பில்லா என பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அஜித் குமார்.
தற்போது அஜித் நடிப்பில் விடாமுயற்சி, Good Bad Ugly ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கிறது. ஏற்கனவே விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தள்ளிப் போயிருக்கிறது. இவர் நடித்த Good Bad Ugly திரைப்படம் வருகிற ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆனால் இந்த இரண்டு படத்தின் பணிகளை கடந்த டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பாகவே முடித்துவிட்டார் அஜித் குமார். அதற்கு காரணம் இந்த வருடம் துபாயில் நடைபெற இருக்கும் கார் ரேசிங்கில் இவரது டீம் கலந்து கொள்ள இருக்கிறது. அதற்காக ஏற்கனவே துபாய் சென்றுவிட்டார் அஜித்குமார்.

இந்நிலையில் துபாயில் கார் ரேசிங்காக பயிற்சியில் ஈடுபட்டபோது அஜித்தின் கார் பயங்கரமான விபத்தில் சிக்கியது. இதில் காரின் முன்பக்கம் பயங்கரமாக சேதம் ஆகிவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயமும் இல்லாமல் அஜித்குமார் உயிர் தப்பிவிட்டார். தற்போது இந்த கார் விபத்துக்கு உள்ளாகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
