பிரம்மாண்ட இயக்குனர் என்று புகழ்பெற்ற சங்கரும் தெலுங்கு திரைப்பட உலகின் முக்கிய ஸ்டாராக வளம் வரும் ராம்சரணும் இணைந்து உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். ராம்சரண் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ள நிலையில் எஸ்ஜே சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சுனில் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ள நிலையில் சு.வெங்கடேசன் மற்றும் விவேக் ஆகியோர் எழுத்தாளர்களாக பணியாற்றியுள்ளனர். சாய் மாதவ் புர்ரா வசனம் எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
RRR திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ராம்சரண் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இன்னும் மூன்று நாட்களில் படம் வெளியாக உள்ள நிலையில் படம் குறித்து பேசி உள்ள SJ சூர்யா படத்தின் செலவு 500 கோடி என குறிப்பிட்டுள்ளார். அதிலும் படத்தில் வரும் ஜர்கண்டி பாடலை பார்த்துவிட்டு மிரண்டு விட்டதாக கூறியிருக்கும் அவர் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அந்த பாடல் விருந்தாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், படத்தில் ஜருகண்டி என்ற பாடலை பார்த்துவிட்டு மிரண்டு விட்டேன். பாடல் குறித்த காட்சி வெளியாகி விட்டதால் வீடியோவை பட குழு வெளியிட்டு விட்டது. இந்தப் பாட்டின் முழு வெர்ஷன் சமீபத்தில் பார்த்தேன். பிரபுதேவா சார் கோரியோகிராபி வேற மாதிரி இருக்கு. ஹாண்ட்சம், பியூட்டிஃபுல் என்ற வார்த்தைகளுக்கு தகுந்த மாதிரி ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி இருவரும் அப்படி இருக்காங்க. ரசிகர்கள் கொடுக்கும் காசு அந்த பாடலுக்கே சரியாகப் போகும் என்று எஸ் ஜே சூர்யா பேசியுள்ளார்.
Content aga pogudhu 😭 chumma iru bro!pic.twitter.com/LnbrNK6axJ
— Game of Dreams💭🏆 (@Game_Of_Dreams) January 6, 2025