தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சப்பானிப்பட்டி கிராமத்தில் பனைத் தொழிலாளர்கள் சார்பாக பனை மரங்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் பனை விழா இன்று நடைபெற்றது. அப்போது பாரம்பரிய முறைப்படி பனை மரத்திலிருந்து கல் இறக்கப்பட்டு படையல் வைக்கப்பட்டது. வழிபாடு முடிந்த பிறகு அங்கிருந்த பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு கள் வழங்கப்பட்டது.
சிறுவர்கள் கள் பருகுவதை கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக பேசிய பனைத் தொழிலாளர்கள், கள் என்பது போதைப்பொருள் கிடையாது. அது ஒரு சத்தான இயற்கை உணவுப்பொருள் என்று கூறி தங்களுடைய செயலை நியாயப்படுத்தினர். தற்போது இந்த விவகாரம் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
