தமிழக வெற்றி கழகம் பொதுக்குழுவில் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில் அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சை தொடங்கியதாக கூறப்படுகின்றது. இது குறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக வெற்றி கழகம் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியாது என்று பதில் அளித்தார். மேலும் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்றும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கரூர் விவகாரத்திற்கு பிறகு விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் எனவும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
