எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி?.. பக்காவாக காய் நகர்த்தும் விஜய்.. சட்டமன்றத் தேர்தலை குறி வைக்கும் தவெக..!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க மறுப்பாக்கம் ஈபிஎஸ் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார். இவர்கள் இருவருக்கும் போட்டியாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். தமிழகத்திற்கு புதிய ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இப்படியான நிலையில் தங்களது கொள்கைக்கு சிக்கல் வராத கட்சிகளுடனே கூட்டணி அமைக்கப்படும் என்று தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கூறுகையில், கொள்கைக்கு மாறுபட்ட கட்சிகளுடன் கூட்டணி சேர வேண்டிய அவசரம் தற்போது இல்லை என்று தெரிவித்தார். ஆனால் திமுக, அதிமுக மற்றும் பாஜகவுடன் ஒருபோதும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதிலிருந்து விஜய் புதிய பிளானில் சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்கிறது நன்றாகவே தெரிகிறது.