மத்திய பிரதேசம் மாநிலம் இந்த ஊரில் இளைஞர் ஒருவர் கேமரா பொருத்தப்பட்ட ஹெல்மெட்டை அணிந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவரை அனைவரும் ஹெல்மெட் மனிதன் என்று அழைத்து வருகின்றனர். நீண்ட காலமாக அவருடைய குடும்பத்தினருக்கும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு விடையே நில தகராறு இருந்து வரும் நிலையில் அவரது பக்க வீட்டுக்காரனான சதீஷ் சவுகான், பலிராம் சவுகான் மற்றும் முன்னா சவுகான் ஆகியோரிடம் இருந்து அவரது குடும்பத்தினருக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்துள்ளது.
இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் போலீசார் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தன்னுடைய பாதுகாப்புக்காக கேமரா பொருத்திய ஹெல்மெட் அணிந்து செல்வதாக அவர் கூறுகின்றார். மேலும் இந்த ஹெல்மெட் கேமரா ஒரு தந்திரம் அல்ல, இது என்னுடைய கேடயம், நாங்கள் பாதுகாப்பு கேட்டு மன்றாடுகின்றோம், அது கிடைக்காததால் நான் செல்வம் எல்லா இடங்களையும் வீடியோ பதிவு செய்ய முடிவு செய்தேன், இதன் மூலமாக எனக்கும் அல்லது என்னுடைய குடும்பத்துக்கோ ஏதாவது நடந்தால் குறைந்தபட்சம் வீடியோ ஆதாரம் இருக்கும் என்ற அடிப்படையில் தான் இப்படி செய்கிறேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
