பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது அதிமுக தரப்பிலிருந்து உத்தேசத் தொகுதிப் பட்டியல் ஒன்று முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதிமுக (170), பாஜக(23), பாமக (23), மற்றவைக்கு(18) எத்தனை தொகுதிகள் என குறிப்பிட்டு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
பாஜக தரப்பில் கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகள் கேட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுகவின் இந்த 23 தொகுதிகள் ஒதுக்கீடு குறித்த முடிவு விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இருப்பினும், இந்தத் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதும், இது பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
