கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் என்ற அறிவிப்பு வந்திருந்த நிலையில், ஏற்கனவே விடுபட்டவர்கள், தகுதியான பெண்கள் என அனைவரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். ஜூலை 15ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 14ஆம் தேதி நிறைவடைந்த “உங்களுடன் ஸ்டாலின்” முதற்கட்ட முகாமில் லட்சக்கணக்கான பெண்கள் உரிமை தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர். தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமில், மேலும் பல மகளிர் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் எப்போதுமுதல், தங்கள் ரூ. 1000 கிடைக்கும் என்று நாள்தோறும் எதிர்பார்த்து வருகின்றனர். தீபாவளிக்கு முன்னதாகவே, உரிமைத் தொகையின் ஆயிரம் ரூபாய் கிடைத்தால், சிறப்பாக இருக்கும் என்று பெண்கள் பூரிப்புடன் பேசிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இது தொடர்பான அப்டேட்கள் அரசிடம் இருந்து வெளியாகவில்லை. எனவே புதிதாக விண்ணப்பித்தவர்கள், எப்பொழுது முதல் ரூ. 1000 கிடைக்கும் என்ற அறிவிப்பை மிக மிக விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்தவர்கள், அதிகபட்சம் 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படி பார்த்தால், ஜூலை 14ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் இறுதி /, செப்டம்பர் முதல் வாரத்தில் 45 நாட்கள் கடக்கிறது. அதனால் இந்த முகம் தொடக்கத்திலேயே, உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்பங்களுக்கு, கூடிய விரைவில் இணைக்கப்பட்டவரா, நிராகரிக்கப்பட்டவரா, அல்லது விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள், கள ஆய்வுக்குப் பின், உரிமைத் தொகை வழங்கப்படும். எப்படி பார்த்தாலும், தீபாவளிக்கு முன்பாக தமிழ்நாட்டு பெண்களுக்கு, உரிமை தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக புதிதாக மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ் நிச்சயம்.
