2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை நிலைநாட்டி விடலாம் என்று செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளார்.
மேலும் ஒருபக்கம் விஜய் அரசியலில் இறங்கி ஆட்டம் காட்டி வருகிறார். இவருடைய தவெக மாநாடு குறித்த பேச்சுகளே இன்னும் அடங்காத நிலையில், அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டார் விஜய். ஆணவக் கொலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளது தவெக. ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்றுமாறு பாஜக அரசுக்கும், திமுக அரசுக்கும் உத்தரவிடுமாறு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கவின் ஆணவக் கொலைக்கு விஜய் வாய் திறக்கவில்லை என விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
