மகளிர் உரிமைத் தொகை…. ரூ. 1,000 டூ ரூ. 2,500?…. வங்கி கணக்கிற்கு வரும் அதிரடி அறிவிப்பு…. இல்லத்தரசிகளுக்கு அடுத்த வாரம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்…!

By Nanthini on ஐப்பசி 27, 2026

Spread the love

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை குறித்துப் பெண்களைப் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மகளிர் உரிமைத் தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெகுவிரைவில் தமிழக முதல்வர் விஜய் வெளியிடுவார் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்தத் தொகை உயர்வு அறிவிப்பு இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய நிதியுதவியாக இருக்கும் என்பதால், அவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதனிடையே, வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை மகளிர் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மற்றொரு இனிப்பான செய்தியும் வெளியாகியுள்ளது. வழக்கமாகத் திங்கள்தோறும் 15-ஆம் தேதி வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை, இந்த முறை பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் மாதத்திற்கான ரூ.1,000 உரிமைத் தொகையை தீபாவளிக்கு முன்பாகவே, அதாவது அடுத்த வாரத்திலேயே தகுதியுள்ள மகளிரின் வங்கித் கணக்குகளில் நேரடியாகச் செலுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பண்டிகைக் காலத்தில் செலவுகளுக்கு உதவும் வகையில் இந்த நிதி வரவு அமைவதால், இல்லத்தரசிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.