“அஜித்திற்கு சிலை.. 2031 சமத்துவ முதல்வர்”…. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ரசிகர்கள்…. ஷாக் ஆன சினிமா உலகம்….!

By Nanthini on ஐப்பசி 27, 2026

Spread the love

சென்னை மாங்காடு அடுத்த கோவூரில், ‘அனைத்து நண்பர்கள் கழகம்’ சார்பில் நடிகர் அஜித்திற்கு சிலை திறக்கப்பட்டுள்ள சம்பவம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. சிலை திறப்பையொட்டி 108 தேங்காய் உடைக்கப்பட்டு, பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர் பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியலில் நடிகர் விஜய்யை எதிர்த்து நிற்கும் தலைவர் அஜித்தான் என்றும், 2031 ஆம் ஆண்டு அவர் அனைத்து மக்களுக்குமான ‘சமத்துவ முதல்வராக’ வருவார் என்றும் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த இயக்கம் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் ரஜினிகாந்த் தொடங்கி பல நடிகர்களின் அரசியல் பிரவேகம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நிலவி வருகின்றன. கடந்த காலங்களில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து பின்னர் பின்வாங்கிய நிலையில், நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி களமிறங்கினார். இவர்களைத் தொடர்ந்து தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்களின் அரசியல் நகர்வுகள் குறித்த யூகங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் அஜித் ரசிகர்களின் அரசியல் பிரவேக முயற்சிகளும் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

   

இதனிடையே, அஜித்தை அரசியலுக்கு வருமாறு பல தரப்பிலிருந்தும் அழைப்புகள் விடுக்கப்பட்டாலும், அவருக்கு அதில் துளியும் விருப்பமில்லை என்பது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே, “எனக்கு அரசியலுக்கு வர எந்தவித விருப்பமும் இல்லை; சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறேன். எனது பெயரையோ புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சியோ இயக்கமோ பயன்படுத்தக் கூடாது” என அஜித் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அரசியல் சார்ந்து எழும் சலசலப்புகளுக்கு அவர் தனது தெளிவான நிலைப்பாடு மூலம் அப்போதே முற்றுப்புள்ளி வைத்தார்.

   

ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அரசியல் கணிப்புகள் ஒருபுறம் இருக்க, நடிகர் அஜித் தற்பொழுது சினிமா மற்றும் கார் பந்தயம் (Car Racing) ஆகியவற்றில்தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். எந்தக் கூட்ட நெரிசலுக்கும் இடமளிக்காமல், தேர்தல்களில் தனது ஜனநாயகக் கடமையைச் சரியாக ஆற்றி வரும் அவர், அரசியல் சார்பற்ற தன் பயணத்தில் உறுதியாக உள்ளார். ரசிகர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் என்னவாக இருந்தாலும், நடிகர் அஜித்தின் திரையுலகப் பயணமும், அரசியலற்ற தெளிவான நிலைப்பாடும் மாறாமல் தொடர்வது குறிப்பிடத்தக்கது.