தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தவெக எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய சொல்லி திமுக பேரம் பேசியதாகக் கூறப்படும் விவகாரம் தற்காலிகமாக ஓய்ந்துள்ள நிலையில், தற்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர் சரத்குமார் மீது முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற விவாதம் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது.
இந்த விவகாரத்தை அரசு எக்காரணத்தைக் கொண்டும் மூடி மறைக்க முயலக் கூடாது என்றும், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் சரத்குமாரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான திமுக தற்போது தீவிரமாக வலியுறுத்தி வருகிறது; இதனால் தமிழக அரசியல் களம் அடுத்தகட்ட பரபரப்பை நோக்கி நகர்ந்துள்ளது.
