அதிர்ச்சி…! இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் விளம்பரங்கள்… மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிரடி கெடு…!

By Swetha on ஆடி 6, 2026

Spread the love

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் குழந்தைகள் தொடர்பான பாலியல் சுரண்டல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை உடனடியாக நீக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இணையதளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த 7 நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவை நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இணையப் பக்கங்களில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதிலும் அரசு எந்தவித சமரசமும் செய்துகொள்ளாது என்பதை இந்த கண்டிப்பான எச்சரிக்கை தெளிவுபடுத்துகிறது.