பொதுவாக பயணத்தின் போது பொது இடங்களில் கழிவறை பயன்படுத்துவது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். கிருமிகள் நம்மை தாக்குமோ என்ற பயம் உண்டு. இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பயன்படுத்தி தான் ஆக வேண்டும். அந்த வகையில் விமான பயணத்தின் போது எப்போது கழிவறையை பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு விமான நிலையங்களில் உள்ள கழிவறையை பயன்படுத்துவது சிறந்தது. இதேபோல விமானத்தில் உணவு வழங்கப்படுவதற்கு முன்பாக கழிவறையை பயன்படுத்தலாம் .
விமானத்தில் வழங்கப்படும் உணவுகளில் சிலருக்கு பிரச்சினை ஏற்படுத்தும் என்பதால் கழிவறை பயன்படுத்துவதை சங்கடமாக உணரலாம். விமானம் தரை இறங்க போகிறது என்ற அறிவிப்புக்கு முன்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விமானத்தில் உள்ள பயணிகள் தூங்கும் நேரங்களில் பயன்படுத்தலாம் . விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் சிறிய அதிர்வு இருக்கும். இது கழிவறையை பயன்படுத்துவதற்கு சாதகமானதாக இருக்காது.
