வந்துவிட்டது Whatsapp Pay… NPCI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…

By Meena on ஜனவரி 8, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பணத்தை கையில் எடுத்து செல்வதில்லை. எல்லாமே ஆன்லைன் பரிவர்த்தனைகள் தான். உலகம் டிஜிட்டல் மையமாக மாறிவிட்டது. ஷாப்பிங் செல்லும் போதும் ஒரு பத்து ரூபாய்க்கு பொருள் வாங்கினால் கூட google pay, phonepe போன்றவற்றை பயன்படுத்தி தான் மக்கள் பணத்தை செலுத்துகிறார்கள். மேலும் இந்த ஆன்லைன் பரிவர்த்தனைகளை தான் மக்கள் விரும்புகிறார்கள்.

   

அந்த வகையில் தற்போது ஏற்கனவே whatsapp pay என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் whatsapp மூலம் ஆன்லைன் பேமெண்ட்களை மேற்கொள்ள குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து மக்களும் whatsapp pay மூலம் இனி பணம் அனுப்ப முடியும் என்று NPCI அறிவித்திருக்கிறது.

   

தேசியக்கொடுப்பணவு கழகம் ஆன NPCI இந்த whatsapp payக்கு விதித்த கட்டுப்பாடுகளை தற்போது தளர்த்தி இருக்கிறது. இதன் வரம்புகள் நீக்கப்பட்டதால் தற்போது நாடு முழுவதும் மக்கள் whatsapp pay மூலம் பணங்களை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் NPCI தனது சமூக வலைத்தள பக்கத்தில், “whatsapp pay மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களும் இப்போது யுபிஐ சேவைகளை பெற முடியும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.

 

இந்த whatsapp pay ஆனது மற்ற யுபிஐ பரிவர்த்தனை செயலிகள் போலவே இதிலும் அதே வசதி இருக்கிறது. வாட்ஸ் அப்பை விட்டு வெளியேறாமல் அதற்குள்ளாகவே பணப் பரிவர்த்தனை செய்வதற்கு இது அனுமதிக்கிறது. இந்த சேவையானது மக்களின் சௌகரியத்தை மேம்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று NPCI அறிவித்திருக்கிறது.