விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 83 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் 8 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 8 பழைய போட்டியாளர்கள் உள்ளே நுழைந்துள்ளார்கள்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந் தர்ஷிகா மற்றும் விஷால் இடையே ஒரு நட்பு உருவானது. இது தற்போது ஒரு பிரச்னையாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். வெளியே வந்த தர்ஷிகா காதலிக்கவில்லை. ஆனால் என்னுடைய உணர்வை நான் வெளிப்படுத்தினேன் என்று கூறியிருந்தார். இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சிலர் தர்ஷிகா மற்றும் அன்ஷிதா வெளியேறியதற்கு உன்னுடைய காதல் விளையாட்டு தான் காரணம் என்று கூற விஷால் கண்ணீர் விட்டு அழுதார்.

இந்நிலையில் தர்ஷிகா ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், “பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளே நுழைந்துள்ள யாரிடமும் நான் என்னுடைய எலிமினேஷன் குறித்து கேட்கல. 24 மணி நேரம் நிகழ்ச்சி பார்ப்பவர்களின் கேள்வியாக தான் உள்ளது. வெளியேற்றுவதற்கு நான் முழு பொறுப்பையும் ஏற்கிறேன். அதற்கு வேறு யாரையும் குற்றம் சொல்ல வேண்டும் என்று நான் நம்பவில்லை. நான் வேண்டுமென்று யாரையும் தவறாக வழிநடத்தல.

அங்கு என்ன நடந்தது என்பதை நான் சம்பந்தப்பட்டவரிடம் கேட்கனும். அதுவும் அந்த இடத்திலயே கேட்கணும்னு விரும்புகிறேன். மற்றவர்கள் அதை வைத்து troll செய்வதும், அதை கிண்டல் செய்யுறதையும் நான் விரும்பல. அதனால பிளீஸ் அதை எல்லோரும் தவிர்த்திடுங்க” என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
