இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே செல்போன் செயலிகளை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக மக்கள் மத்தியில் whatsapp பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. இந்த செயலியில் மக்களை கவரும் வகையில் பலவிதமான வசதிகள் இருப்பதால் பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தங்கள் பயனர்களுக்கு ஏற்றவாறு whatsapp நிறுவனம் தொடர்ந்து பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. மெட்டா நிறுவனம் தற்போது whatsapp செயலியில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி இனி நாம் ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் போது நாம் விரும்பும் தரத்தில் டவுன்லோட் செய்ய முடியும். தற்போது சோதனையில் இருக்கும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும். அதன்பிறகு whatsapp செட்டிங்ஸ் இல் ஆட்டோ டவுன்லோட் குவாலிட்டி ஆப்ஷனை செலக்ட் செய்தால் இந்த அம்சம் ஆக்டிவேட் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் மூலமாக நாம் போட்டோ மற்றும் வீடியோக்களை standrad, HD தரத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
