கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மற்றும் ஹாவேரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில், பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை (KSRTC) ஓட்டுநர் திடீரென சாலையின் நடுவே நிறுத்தி தொழுகையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்த நிலையில், போக்குவரத்து அதிகம் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநரின் செயல் பயணிகளைப் பீதியடையச் செய்தது.
A KSRTC driver halted a moving bus full of people on the highway between Hubballi and Haveri. He stopped so he could do namaz in the middle of the road.
The conductor watched without saying anything.
Passengers were afraid, puzzled, and stuck.
Islamists are taking over,… pic.twitter.com/tkA9P6onWC
— Tathvam-asi (@ssaratht) January 6, 2026
ஓட்டுநர் பேருந்திலேயே அமர்ந்து தொழுகை செய்தபோது, பேருந்தின் நடத்துநர் அதனைத் தடுக்காமல் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். இதனால் செய்வதறியாது திகைத்த பயணிகள், குழப்பத்துடனும் பயத்துடனும் பேருந்திற்குள்ளேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை மீறிய இந்தச் செயல் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
