soorasamharam

இன்று திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு வீட்டில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா…? கட்டாயம் இதை பண்ணுங்க…

By admin on கார்த்திகை 7, 2024

Spread the love

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகவும் முக்கியமானது சிறப்பு வாய்ந்தது திருச்செந்தூர். கடலுக்கு அருகில் அமைந்திருப்பதால் இந்த திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பல ஊர்கள் இருந்து மக்கள் வருவதுண்டு. கடலில் மூழ்கி குளித்துவிட்டு முருகனை தரிசித்தால் நம்மை பிடித்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

   

இந்த திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் ஒரு நிகழ்வு கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹாரம். அசுரனின் தலைவனாக இருந்த சூரபத்மனை முருகன் போர் செய்த நிகழ்வு தான் இந்த சூரசம்காரம்.

   

ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் கடற்கரையில் முருகப்பெருமாள் சூரபத்மனை சூராசம்ஹாரம் செய்யும் நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி மொத்தம் எட்டு நாட்கள் கொண்டதாகும். முதல் ஆறு நாட்கள் முருகப்பெருமாள் சூராபத்மனுடன் போரிட்டு ஏழாவது நாள் அவனை வதம் செய்வார். எட்டாவது நாள் முருகபெருமானின் திருக்கல்யாண வைபவத்தோடு இந்த கந்தசஷ்டி நிறைவு பெறும்.

 

முருகப்பெருமான் சூரபத்மனோடு 6 நாட்கள் போர் புரியும்போது மக்கள் அனைவரும் முருகன் வெற்றி பெற வேண்டும் என்று விரதம் இருந்தார்களாம். அதன் நினைவாகவே இந்த கந்த சஷ்டியின் ஏழு நாட்களும் மக்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவர். குழந்தை வரம் வேண்டுகோர் திருமணம் நடக்க வேண்டும் தீராத நோய் தீர வேண்டும் தொழிலில் முன்னேற்றம் பெற வேண்டும் என்பவர்கள் இந்த சஷ்டி நேரத்தில் விரதம் இருந்து முருகனை மனதார வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

இன்றைய தினம் கந்த சஷ்டியின் ஏழாவது நாள் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறவிருக்கிறது. இந்த சூரசம்காரம் நிகழ்வை நேரில் கண்டு தரிசிக்க முடியாதவர்கள் டிவியில் நேரலையில் காணலாம். இந்த சூரசம்காரம் முடிந்த பிறகு அனைவரும் வீட்டில் இருந்தே என்ன செய்யலாம் என்பதை பற்றி இனி காண்போம்.

சூரசம்காரம் ஆரம்பித்த உடனே பூஜைக்கு வேண்டியதை எல்லாமே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்த உடனே வீட்டில் விளக்கு ஏற்றி முருகப்பெருமானுக்கு மலர்கள் சாற்றி நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். கெட்டதை ழித்து நல்லதை நிலை நிறுத்திய முருகப்பெருமானை போல நம் வாழ்க்கையில் கெட்டது எல்லாம் அழித்து நல்லவைகள் நடக்க வேண்டும் என்று அனைவரும் மனதார வேண்டிக் கொண்டால் நிச்சயம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.