தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்தவர் நடிகர் பிரசாந்த். அதையடுத்து அவர் பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து 90 களில் சாக்லேட் பாய் கதாநாயகனாக வலம் வந்தார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். ஆனால் 2000 களுக்குப் பிறகு அவரின் மார்க்கெட் டல்லானது. இடையில் அவரின் திருமண வாழ்க்கையும் சிக்கலில் முடிந்ததால் அவரால் சினிமாவில் தொடர்ச்சியாக கவனம் செலுத்த முடியவில்லை.
அதனால் அவர் சினிமாவில் நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் தெலுங்கு படமொன்றில் குணச்சித்திர வேடத்தில் நடித்தது ரசிகர்களுக்கு இடையே சோ கத் தை ஏற்படுத்தியது. அதையடுத்து இப்போது விஜய்யின் கோட் திரைப்படத்திலும் செகண்ட் ஹீரோவாக நடித்து வருகிறார்.
நீண்ட ஆண்டுகளாக அவர் நடிப்பில் ரிலீஸாகாமல் இருந்த அந்தகன் திரைப்படம் தற்போது ரிலீஸாகி அவருக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் பிரசாந்த் வின்னர் (பிரசாந்தின் கடைசி ஹிட் படம்) சந்தித்த பிரச்சனைகள் குறித்துப் பேசியுள்ளார்.
அதில் “வின்னர் படம் பல பிரச்சனையில சிக்கி ரிலீஸ் தாமதமாகிகிட்டே போச்சு. அப்போ நாங்கதான் செலவு பண்ணி படத்த எடுத்தோம். கிளைமேக்ஸுக்கு முன்னாடி வர்ற பாட்டெல்லாம், நான் காசு போட்டு ஷூட் பண்ண சொன்னேன். ஆனா அந்த தயாரிப்பாளர் கடைசியில பிரசாந்தாலயும் அவங்க அப்பாவாலயும் என் வாழ்க்கையே போச்சுன்னு பேட்டி கொடுத்தாரு.” எனப் பேசியுள்ளார்.

#image_title
வின்னர் படம் இன்று பெரியளவில் கொண்டாடப்பட்டாலும் அந்த தயாரிப்பாளருக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்படுத்தியது. அதன் காரணமாக அவர் பொருளாதார ரீதியாக நஷ்டமடைந்து தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்கு ஆளானார். அதிலிருந்து இரு தரப்பும் மாறி மாறி மற்றவர்களைக் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
