EMI கட்ட லேட் ஆகிடுச்சா…? பயப்படாதீங்க….! சிபில் ஸ்கோர் குறையாம இருக்க இதை பண்ணுங்க போதும்..!!

By Devi Ramu on தை 13, 2026

Spread the love

வங்கிக் கடன் வாங்கியவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் ஒரு மாதத் தவணையை (EMI) கட்டத் தவறினால், சிபில் ஸ்கோர் காலியாகிவிடும் என்று பயப்படத் தேவையில்லை. ஒருமுறை தாமதமானால் உங்கள் கடன் வரலாறு உடனடியாகப் பாதிக்கப்படாது. குறிப்பாக அந்தத் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்திவிட்டால் பெரிய சிக்கல்கள் ஏதுமில்லை. ஆனால், வங்கியிடம் எந்தத் தகவலும் சொல்லாமல் அமைதியாக இருப்பதுதான் ஆபத்தானது. இது தேவையற்ற அபராதக் கட்டணங்களை உயர்த்துவதுடன், எதிர்காலத்தில் நீங்கள் மீண்டும் கடன் வாங்கும் தகுதியையும் குறைத்துவிடும்.

தவணை கட்ட முடியாத சூழல் ஏற்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி அதற்கான காரணத்தைச் சரியாக விளக்குவது அவசியம். உங்கள் மீது நற்பெயர் இருந்தால் வங்கிகளே கால அவகாசம் அல்லது மாற்றுத் திட்டங்களை வழங்க முன்வரும். குறிப்பாகப் புதிய கடன் வாடிக்கையாளர்கள் வட்டி மற்றும் அபராதக் கணக்கீடுகளை முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. சரியான நேரத்தில் வங்கிகளுடன் பேசித் தீர்வுக காண்பதன் மூலம் உங்கள் பொருளாதாரக் கௌரவத்தையும், கிரெடிட் ஸ்கோரையும் எளிதாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.