சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் பிரபலமான புகழ் பெற்ற நடிகராவார். இவரின் முழு பெயர் விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி என்பதாகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த சிவாஜியின் நடிப்பு திறமையை பார்த்த தயாரிப்பாளர் பி ஏ பெருமாள் முதலியார் பல எதிர்ப்பை தாண்டி இவரை பராசக்தி திரைப்படத்தில் நடிக்க வைத்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிவாஜி கணேசன் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரின் திறமையை பார்த்து வியந்த மக்கள் இவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று அழைத்தனர்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்து பிரபலமானார் சிவாஜி கணேசன். இவர் தனது வாழ்நாளில் 288 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அதில் தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தேசிய விருது வாங்கவில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அவரும் விருது வாங்கி இருக்கிறார் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

#image_title
ஆனால் விடுஅவர் வாங்க மறுத்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே கமலஹாசன் தானாம். சிவாஜி கணேசன் கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், திருவிளையாடல், பராசக்தி என பல மாஸ்டர் பீஸ் படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அவர் துணை கதாபாத்திரத்தில் நடித்த படத்திற்கு தான் அவருக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. இந்நிலையில் சிவாஜி குறித்து பேசியிருந்த நம்பியார், “உலகில் தலைசிறந்த நடிகர்களுக்கெல்லாம் தலைசிறந்தவர் தான் சிவாஜி.

எந்தகதாபாத்திரம் இருந்தாலும் சிறப்பாக நடிப்பார். உத்தமபுத்திரன் படத்தில் வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை சொல்லும் கதாபாத்திரம் தான் எனக்கு. அந்த படத்திற்கு பின் சிவாஜி வில்லனா நடிச்சிருந்தா எனக்கு வேலையிலாம போயிருக்கும். அந்த அளவுக்கு பிரமாதமா நடிப்பார்” என்று கூறியிருக்கிறார்.
