கிறிஸ்துமஸ் தொடங்கியதில் இருந்து நியூ இயர் இனி பொங்கல் வரவிருக்கிறது. அதனால் பல வியாபார தளங்களில் பலவித ஆஃபர்களுடன் ஸ்மார்ட்போன் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் புது போன் வாங்க வேண்டும் அதுவும் குறைந்த பட்ஜெட்டில் நல்ல பெர்ஃபார்மன்ஸ் செய்யக்கூடிய போன் நீங்கள் வாங்க விரும்பினால் தற்போது Motorola ஸ்மார்ட் போன் 30 சதவீதம் ஆஃபரில் விற்பனை ஆகி கொண்டிருக்கிறது. அது என்ன மாடல் என்பதை பற்றி இனி காண்போம்.

Motorola Edge 50 Neo ஸ்மார்ட்போன் தான் தற்போது 30 சதவீத ஆஃபரில் பிளிப்கார்ட் இல் விற்பனை ஆகி வருகிறது. 6.4 இன்ச் சூப்பர் ஹெச்டி டிஸ்ப்ளே 50 எம்பி ரியர் கேமரா 7300 சிப்செட் ப்ராசசர் உடன் இது வருகிறது.

4310mAh பேட்டரி 12 ஜிபி ரேம் 512 gb ஸ்டோரேஜ் உடன் இது வருகிறது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனின் விலை ரூ 29,999 ஆக இருந்தது. தற்போது 30 சதவீதம் ஆஃபர் போக இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ 20,999 விலையிலேயே வாங்குவதற்கு கிடைக்கிறது. இது தவிர idfc ,hdfc பேங்கிலும் ஆயிரத்தில் இருந்து 2000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. 20,000 ரூபாய் பட்ஜெட் விலையில் அசத்தலான Motorola Edge 50 Neo ஃபோனை இப்போது நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
