விஜய்யின் பேச்சைக் கேட்டுத் தனது 5 வயது மகன் பிடிவாதம் செய்ததால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார். பெற்றோரிடம் அடம் பிடித்துத் தவெக-விற்கு வாக்களிக்கச் செய்யுமாறு குழந்தைகளிடம் விஜய் கேட்டுக்கொண்டதைக் கண்டித்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குழந்தைகளை அரசியலில் ஈடுபடுத்துவது போன்ற விஜய்யின் கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. தனது மகனின் செயலால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு விஜய்யே காரணம் எனக் கூறி, இந்தப் புகார் மனு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
