முதியவர்கள் காசி யாத்திரை செல்வது எதற்காக…? அதன் முக்கியத்துவம் என்ன…?

Spread the love

இந்தியாவில் மிகப் புண்ணிய ஸ்தலமாக பார்க்கப்படுவது காசி மற்றும் ராமேஸ்வரம். வயதானவர்கள் காசி யாத்திரை செல்லப் போகிறோம் என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். தற்காக இந்த காசி யாத்திரை செல்கிறார்கள் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

காசி யாத்திரை செல்வதால் நம் வாழ்வில் நாம் செய்த பாவங்களும் முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்களும், கர்ம வினைகளும் நீங்கி இறப்புக்குப் பிறகு நாம் சொர்க்கத்தை சென்றடைவோம் என்பது ஐதீகம். காசி யாத்திரை என்றாலே புனித யாத்திரை தான் என்று கூறுவார்கள். காசிக்கு செல்வதற்கு முன்பு ராமேஸ்வரம் சென்றுவிட்டு தான் காசிக்கு செல்ல வேண்டும் என்றும் கூறுவது உண்டு.

ராமேஸ்வரம் காசி யாத்திரை செல்வது ஆன்மாவின் முழுமையான விடுதலை அதாவது மோட்சம் அடைய உதவுகிறது. ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் மற்றும் காசியில் கங்கா நதியில் நீராடுவது நம் உடலையும் ஆன்மாவையும் சுத்திகரிக்கிறது என்பது அர்த்தமாகும்.

அதாவது நம் வாழ்க்கையில் பிறந்து வளர்ந்து படிப்பு முடித்து வேலை செய்து திருமணம் செய்து குழந்தைகள் பெற்று அந்த குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கும் திருமணம் செய்து பேர குழந்தைகளை பார்த்துவிட்டு இருக்கும் முதியவர்கள் நம் வாழ்க்கையில் எல்லாவித கடமைகளையும் முடித்து விட்டோம். இனி நம்முடைய அடுத்த தலையாயக் கடமையானது இறைவனை அடைய வேண்டியது மட்டும் தான்.

இறைவனை அடைவதற்கு முன்பு நம் உடலையும் உள்ளத்தையும் முதலில் தூய்மைப்படுத்த வேண்டும் நம் மனதை இறை வழியில் செலுத்த வேண்டும் என்பதன் பொருட்டாக தான் காசி ராமேஸ்வரம் யாத்திரை செல்கிறார்கள். அங்கு சென்று இறைவனை வழிபட்ட பிறகு இந்த புண்ணிய நதிகளில் நீராடிய பிறகு நம்முடைய ஆன்மாவானது கடவுளை நோக்கி மோட்சத்தை அடைவதற்கு தொடங்கிவிடுமாம். இதனால் இறப்பிற்கு பிறகு சொர்க்கத்தை அடைவார்கள் என்பது ஐதீகம்.

admin

Recent Posts

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

3 minutes ago

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

12 minutes ago

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

18 minutes ago

“விஜய்யை குறைச்சு எடை போடாதீங்க” திமுகவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி… முக் அழகிரி மகள் அதிரடி..!!

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…

23 minutes ago

அண்ணன் போட்ட ‘ஆர்டர்’.. தங்கை எடுத்த ‘ஆக்சன்’!… நாடாளுமன்றத்தில் கனிமொழி கொடுத்த ‘ஷாக்’ நோட்டீஸ்… பாஜகவின் மசோதாவிற்கு செக் வைத்த திமுகவின் வியூகம்…!!!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…

24 minutes ago

“அரசாங்க சொத்துன்னு பார்த்ததில்லை.. டாஸ்மாக்கை தீ வச்சேன்”… பெரம்பூரில் ‘புரட்சி’ கிளப்பும் திலகபாமா… அதிர்ந்த தேர்தல் களம்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…

36 minutes ago