ரோகிணி வாழ்க்கையில் விளையாடும் விதி… இந்த முறை மாட்டி கொள்வாரா…? சிறகடிக்க ஆசையில் இன்று…

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் அண்ணாமலை வேலைக்கு கிளம்புகிறார். அடுத்ததாக ரோகிணி தனது அம்மாவையும் மகனையும் பார்க்க வேண்டும் என்று செல்கிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

இன்றைய எபிசோடில் ரோகினி தனது அம்மாவையும் மகனையும் சென்று பார்க்கிறார். பார்த்துவிட்டு கிரிஷை ஸ்கூலுக்கு கூட்டி செல்வதற்காக ஆட்டோவில் கூட்டி செல்கிறார். அப்போது மகனிடம் மிகவும் காராக நடந்து கொள்கிறார் ரோகினி. நீ யாரையும் பார்க்கக்கூடாது பேசக்கூடாது என்று சொல்கிறார்.

ஸ்கூலுக்கு சென்று உள்ளே என்டர் ஆகும் சமயத்தில் அங்கே அண்ணாமலையும் முத்துவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் ரோகிணி. அண்ணாமலை அந்த ஸ்கூலுக்கு தான் வேலைக்கே வந்து இருக்கிறார். முத்து வேண்டாம் என்று சமாதானம் செய்து கொண்டிருக்கிறார் பின்னர் அண்ணாமலை நான் வேலை செஞ்சுட்டு வரேன் நீ போடா நீ முதல்ல கிளம்பு என்று அனுப்பி வைக்கிறார்.

முத்து சென்ற பிறகு ரோகிணி அங்கிருந்த வாட்ச்மேனிடம் இவரு எதுக்கு இங்க வந்திருக்காரு தினமும் வேலைக்கு வருவாரா என்று கேட்கிறார். உடனே வாட்ச்மேன் இல்ல மேடம் அவங்க வாரத்துக்கு ஒரு நாள் தான் வேலைக்கு வருவாரு என்று கூறுகிறார்.

உடனே அதிர்ச்சி அடைந்த ரோகினி தனது பையனை கூட்டிக்கொண்டு நேராக தனது வீட்டிற்கு சென்று அவர் அம்மாவிடம் கத்துகிறாள். விதி ஏன் என் வாழ்க்கையில் இப்படி விளையாடுதுன்னு தெரியல மனோஜோட அப்பா க்ரிஷ் சேர்த்திருக்க ஸ்கூலுக்கு வேலைக்கு வந்து இருக்காரு என்று கூறுகிறாள். உடனே ரோகினியின் அம்மா அதிர்ச்சி அடைந்து விதி நேரமே சரியில்ல ரோகிணி நீ எத்தனை நாள் இப்படி பயந்து பயந்து ஒளிஞ்சு கிட்டு இருப்ப எனக்கு இதை நினைச்சாலே ரொம்ப கவலையா இருக்கு பேசாம நீ உண்மையை சொல்லி மன்னிப்பு கேளு அவங்க ஏத்துக்குவாங்க என்று கூறுகிறார்.

உடனே கோபப்பட்ட ரோகினி இந்த மாதிரியெல்லாம் நீ என்கிட்ட பேசாத அம்மா என் அத்தையை பத்தி உனக்கு தெரியாது என்னோட விஷயங்கள் தெரிஞ்சா அவங்க என்ன வீட்டை விட்டு துரத்திடுவாங்க நீ அமைதியா இரு நான் பார்த்துக்கிறேன் புதன்கிழமை தான் அங்கிள் வேலைக்கு வருவாராம் அன்னைக்கு நீ கிரிஷை ஸ்கூலுக்கு அனுப்பாத வீட்ல இருக்கட்டும் என்று சொல்கிறாள்.

மனோஜும் அவருடைய பிரண்டும் மனோஜ் வாங்கவிருக்கும் பங்களாவை போய் சென்று பார்க்கின்றனர். ரோகினிக்கு போன் செய்து வர செய்கிறான் மனோஜ். இருவரும் அந்த பங்களாவை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மிகவும் பிடித்திருக்கிறது வாங்க வேண்டும் என்ற சிந்தனையில் சந்தோஷத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

admin

Recent Posts

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

8 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

19 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

32 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

32 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

38 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

48 minutes ago