Categories: சினிமா

இத்தனை பிரச்சனைக்கும் இவங்க தான் காரணமா?.. விடாமுயற்சி கதை திருட்டு விவகாரத்தில் வெளிவந்த உண்மை..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருகின்றார். துபாயிலிருந்து நேற்று சென்னை கிளம்பி இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் டப்பிங் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இதனை முடித்த கையோடு குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணிவு திரைப்படத்தை முடித்த கையோடு விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் கமிட்டானார். லைகா நிறுவனம் தயாரிக்க இருந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் எடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் அங்கு ஏற்பட்ட கால சூழ்நிலை காரணமாக படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க அஜித் கமிட் ஆகிவிட்டார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இரண்டு திரைப்படங்களில் ஏதாவது ஒரு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென்று விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த நிலையில் விடா முயற்சி வெளியிட்டு இருக்கு தயாராகி வரும் நிலையில் திரைப்படத்திற்கு புதிய பிரச்சனை வந்துள்ளது. இந்த படம் பிரேக் டவுன் திரைப்படத்தின் தழுவல் என்பது பலருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனால் இந்த திரைப்படத்தில் ரீமேக் உரிமையை சரியாக வாங்கவில்லை என்றும் இதனால் 150 கோடி நஷ்ட ஈடு கேட்டதாகவும் தகவல் வெளியானது. இப்படியான நிலையில் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் லைகா நிறுவனம் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது லைகா நிறுவனத்தில் வீரா என்பவர் தான் அக்ரீமெண்ட் தொடர்பான மற்றும் லீகலான விஷயங்களை கவனித்து வருகின்றார்.

அவரை திடீரென்று சுபாஸ்கரன் லண்டனுக்கு அழைத்துக் கொண்டதால் அவர் எங்கிருந்து வேலைகள் அனைத்தையும் பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் முறையாக பணத்தின் ரீமேக் உரிமையை வாங்குவதற்கு தவறிவிட்டார்கள். அதே சமயம் தமிழ்நாட்டில் இருக்கும் லைகா நிறுவனத்திற்கும் லண்டன் நிறுவனத்திற்கும் இடையே கம்யூனிகேஷன் சரியாக இல்லை என்பதால் இதுபோன்ற பிரச்சனைகள் தற்போது எழுந்துள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

7 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

19 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

32 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

32 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

37 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

47 minutes ago