திருமணம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது முக்கியமானது மாங்கல்யம் தாலி கட்டும் வைபவம் தான். திருமணமானதுக்கு முத்திரையானதே தாலி தான். மணமகன் மணமகள் கழுத்தில் கட்டுவது தங்கத்தினால் ஆன தாலியை மஞ்சள் சரடு வைத்து கட்டுவர். இது தங்கத்தினால் ஆனதுனால் இதை தாலி என்று கூறுவார்களா என்று கேட்டால் இல்லை. இதற்கு பின்னால் சுவாரசியமான தகவல் இருக்கிறது அது என்னவென்று இனி காண்போம்.

நாம் பண்டைய காலத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை பார்த்திருப்போம். பழைய ஓலையினால் தான் ஓலைச்சுவடிகளை எழுதி இருப்பார்கள். ஏனென்றால் பனை ஓலை மங்காத தன்மை கொண்டது. பல நாட்கள் நீடிக்க கூடியது. அதுவும் தாளை பனைமரத்து ஓலையில் தான் இதை எல்லாம் உருவாக்கி இருப்பார்கள்.
தாளை பனைமரத்து ஓலையில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் தான் இன்றளவும் அழியாமல் இருக்கிறது. முந்தைய காலத்தில் மஞ்சள் கிழங்கையும் மஞ்சள் சரடையும் வைத்து தான் தாலியாக கட்டியிருக்கிறார்கள். அதற்கும் மிகப் பழமையான பண்டைய காலத்தில் தாளை பனைமர ஓலையை தான் தாலியாக கட்டியிருக்கிறார்கள்.
தாளை பனைமரம் ஓலையை எடுத்து அதில் மணமகன் பெயர் மணமகள் பெயர் அவர்கள் குடும்பத்தார் பெயர் ஆகியவற்றை எழுதி அந்த ஓலையை மடக்கி தாளை பனைமரம் நாரை வைத்து கட்டி அதை மணமகன் கையில் கொடுத்து மணமகளுக்கு கட்ட சொல்லி இருக்கிறார்கள்.

தாளை பனைமரம் ஓலையில் செய்ததால் தான் இதற்கு தாலி என்ற பெயர் வந்திருக்கிறது. காலப்போக்கில் உலோகத்தால் செய்யப்பட்ட தாலி பித்தளையால் செய்யப்பட்ட தாலி செம்பு தாலி அதுக்கு அடுத்ததாக தற்போது தங்கத்தினால் ஆன தாலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் மாங்கல்யத்திற்கு தாலி என்ற பெயர் வந்தது.
