விஜய் டிவியின் முன்னணி சீரியலான சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து TRP யில் அதிக புள்ளிகளை வாரந்தோறும் பெற்று வரும் இந்த சீரியல் முதலிடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு முத்து மற்றும் மீனா கதாபாத்திரங்கள் தான் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றன. இதில் முத்துவாக நடித்து வரும் வெற்றி வசந்த் மற்றும் மீனாவாக நடித்து வரும் கோமதி பிரியா இருவரும் இந்த சீரியலின் வெற்றிக்கு முதல் காரணங்களாக இருக்கிறார்கள்.

#image_title
வெற்றி வசந்திற்கு இது முதல் சீரியல் தான். இருந்தாலும் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே வெற்றி வசந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய நிச்சயதார்த்தத்தை அறிவித்திருந்தார். அதாவது இவர் விஜய் தொலைக்காட்சியில் பொன்னி சீரியலில் நாயகியாக நடித்து வரும் வைஷ்ணவியை காதலிப்பதாக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகான ஒரு வீடியோவை ரசிகர்களுக்கு பகிர்ந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தான் மிக பிரம்மாண்டமாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில் பலரும் வாழ்த்தினார்கள். மேலும் இவர்களுடைய நிச்சயதார்த்த விழாவில் சக சீரியல் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

#image_title
. இந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று(நவம்பர் 28ஆம் தேதி வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் நடைபெற இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திருமணம் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு தற்போது தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
