பூஜையின் போது கடவுள்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வைப்பது ஏன்…? அதன் முக்கியத்துவம் என்ன…?

Spread the love

இந்து மத வழிபாட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்வது வழக்கம். ஒவ்வொரு கடவுள்களுக்கும் ஒவ்வொரு முறையாக பூஜை செய்வார்கள். அப்படி பூஜிக்கும் போது கடவுள்களுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் படைத்து வணங்குவது வழக்கம். இந்த தீர்த்தம் பிரசாதம் கடவுளுக்கு வைப்பது ஏன் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

கடவுள் எல்லா பக்கமும் நிறைந்திருக்கிறார். அதேபோல் நீரிலும் கடவுள் இருப்பார் என்பது பொருள். அதனால்தான் பூஜையின் போது ஒரு சிறிய செம்பு பாத்திரத்தில் வைகை கங்கை தாமிரபரணி என புனித நீரை நிரப்பி வைப்பார்கள். இப்படி புனித நீர் இல்லாதவர்கள் நிறைகுடத்து நீரை அதில் வைக்கலாம்.

ஒரு செம்பு அல்லது பித்தளை பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு மனதார பூஜையில் இஷ்ட தெய்வத்தை அந்த நீரில் எழுந்தருள செய்ய வேண்டும். நம் பூஜை செய்யும் போது கடவுள் அந்த நீரில் வருவார் என்பது ஐதீகம். அதற்குப் பிறகு அது தீர்த்தமாக மாறுகிறது முடிந்தவுடன் பக்தர்கள் அந்த நீரை பருகலாம்.

அதற்கு அடுத்ததாக பூஜையின் போது வைக்கக்கூடிய முக்கியமானது பிரசாதம். கடவுள்களை ‘ப்ர’ என்ற சொல்லால் அழைக்கிறார்கள். கடவுள்களுக்கு படைக்கக்கூடிய சாதம் ஆனது ‘ப்ர’ என்ற சொல்லோடு சேர்ந்து பிரசாதம் என்றாது. முந்தைய காலங்களில் கடவுள்களுக்கு சாதம் வைத்து படைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் அது சர்க்கரைப் பொங்கல் பாயாசம் என மாறி இருக்கிறது.

ஒரு சிலர் தினமும் நாம் ஏதாவது ஒரு பிரசாதம் தயாரிக்க முடியலையே என்று நினைப்பவர்கள் குறைந்தபட்சம் கற்கண்டு ஒரு இனிப்பு பொரிகடலை போன்றவைகளையும் பிரசாதமாக படைக்கலாம். இந்த தீர்த்தம் மற்றும் பிரசாதம் வைத்து பூஜை செய்யும்போது தான் அந்த பூஜை முழுமையடையும். நாம் நினைத்த காரியம் நிறைவேறும். கடவுள்களும் தங்களுடைய முழுமையான அருளாசியை நமக்கு புரிவார்கள் என்பது ஐதீகம்.

admin

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

5 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

5 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

5 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

6 மணத்தியாலங்கள் ago