தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெற்றி பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். திமுகவுக்கு போட்டியாக பல வியூகங்களை வகுத்து வரும் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட சின்னங்களை கேட்டு தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தது. இந்நிலையில் மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்தை விரைவில் அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவிக்க உள்ளார். 2014 மற்றும் 2016 தேர்தல்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
