NEWS
நடிகர் சூரி ஹோட்டலில் என்ன நடக்கிறது…? பரபரப்பில் மதுரை…
தமிழ் சினிமாவில் பின்னணியில் நடித்து தனது உழைப்பு மட்டும் விடாமுயற்சியின் மூலம் நகைச்சுவை நடிகராக மாறி இன்று ஹீரோவாக ஆகி இருக்கிறார் நடிகர் சூரி. மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் சிறு வயது முதலே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு சென்னைக்கு குடி பெயர்ந்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் தக்கவைத்து கொண்டுள்ளார்.
சினிமாவில் நடிகராக இருந்து வரும் சூரி மதுரையில் அம்மன் ரெஸ்டாரண்டுகளை நடத்தி வருகிறார். இது மட்டுமில்லாமல் மதுரையில் பல்வேறு இடங்களில் இவரது உணவகங்கள் இருக்கின்றன. அப்படி மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் நடிகர் சூரி அவர்களின் அம்மன் கேண்டின் இயங்கி வருகிறது. தற்போது இந்த கேண்டினால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் சூரி.
அது என்னவென்றால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தினமும் மதியம் தன்னார்வலர்கள் அங்கு மருத்துவமனையில் ணவு பொட்டலங்களை இயலாதவருக்கு வந்து வழங்கி வந்துள்ளனர். இதனால் அம்மன் ஹோட்டலில் வியாபாரம் கெட்டுப் போவதாக அங்கிருந்த ஊழியர்கள் அந்த தன்னார்வலர்கள் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த உணவகத்தில் இருந்த ஒரு ஊழியர் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். இந்த மாதிரி ஒரு பிரச்சனையும் நடக்கவில்லை. நடிகர் சூரிக்கும் இந்த மாதிரி பிரச்சினைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கூறி பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த உணவு பொட்டலங்கள் வழங்குவதில் பிரச்சனை வராமல் இருப்பதற்காக காவல்துறையினர் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வெளியே நின்று தன்னார்வலர்கள் உணவுப் பொட்டலங்களை வழங்கலாம் என்று கூறியிருந்தனர். அதன்படி கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையின் வெளியே பொட்டலங்களை வண்டியில் வைத்து வழங்கி வந்தனர். இது பொது மக்களுக்கு மிகவும் சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், நாங்க உடம்புக்கு ரொம்ப முடியாம தான் ஹாஸ்பிடலில் வந்து நாங்கள் சேர்ந்திருக்கோம். நோயாளிகளை அங்க விட்டுட்டு இங்க வெளியே ஹாஸ்பிடலுக்கு வெளியே இருந்த ட்ராஃபிக்ல வந்து பொட்டலங்களை வாங்குறது எங்களுக்கு ரொம்ப சிரமமா இருக்கு. முதல்ல மருத்துவமனைக்கு உள்ள வச்சு ஒரு இடத்துல கொடுத்துட்டு இருந்தாங்க. அதுவே ரொம்ப நல்லா இருந்துச்சு. அதை ஏன் இப்படி மாற்றினார்கள் என்று தெரியவில்லை. பழையபடி உள்ள வச்சு கொடுத்தாங்கன்னா கூட எங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும் ஒரு அரை மணி நேரம் தான் நாங்க வாங்கிட்டு போயிடுவோம். ஏதோ ஒரு கஷ்டத்துக்கு தான் நாங்க இந்த ஹாஸ்பிடலுக்கு வரோம். அந்த சாப்பாடு இருந்தா எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். இதுக்கு காவல்துறை ஏதாவது முயற்சி எடுத்து பண்ணனும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தன்னார்வலர்கள் உதவி செய்யும் நோக்கிலேயே தினம் தோறும் உணவு பொட்டலங்கள் வழங்கி வந்தாலும் பொதுமக்களிடையே அந்த உணவுப் பொட்டலங்களை வாங்குவதற்கு தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதனால் உணவு வழங்க வந்த தன்னார்வலர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். சில நேரம் கூட்ட நெரிசல் தாங்காமல் அவர்கள் வண்டியை எடுத்து விட்டு செல்வதுண்டு. அதற்கு பின்னாலே உணவு பொட்டலங்கள் வேண்டும் என்று மக்கள் வண்டிக்கு பின்னாலே கை நீட்டி செல்லும் துயரமும் நடக்கிறது. இதற்கு ஒரு முடிவு கொண்டு வர வேண்டும் என்று காவல் துறையிடம் கோரிக்கையை வைத்துள்ளனர்.