தினமும் வெந்நீரில் குளிக்கலாமா…? அதனால் உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா…?

Spread the love

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு குளியல் போட்டால் தான் அன்றைய தினம் நன்றாக இருக்கும். சிலருக்கு குளிர்ந்த நீரில் குளிப்பது பிடிக்காது. பெரும்பாலானோர் சுடுதண்ணியில் தான் குளிக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால் சுடு தண்ணீரில் குளித்தால் தான் உடலுக்கும் மனதிற்கும் சுகமாக இருக்கும். புத்துணர்ச்சி தரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு.

குளிர்காலத்திலோ, உடம்பு சரியில்லை என்றாலோ, உடல் அசதியாக இருக்கிறது என்றாலோ வெந்நீரில் குளிக்கலாம். ஆனால் தினமும் நீங்கள் வெந்நீரில் குளிக்கிறீர்கள் ஆனால் அது உங்கள் உடம்புக்கு நல்லது கிடையாது. ஆண்கள் தினமும் சுடு தண்ணீரில் குளித்துக் கொண்டு இருந்தால் அவர்கள் ஆண்மைக்கு பிரச்சினை வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் சுடுதண்ணீரில் தினமும் குளிக்கும்போது நம் சருமம் வறண்டு மென்மைத்தன்மையை இழந்து விடும். சூடான தண்ணீரை தலையில் ஊத்தி குளிக்கும் போது அது முடியின் வேர்களை வலுவிழக்க செய்து முடி கொட்டுவதற்கு வழிவகுக்கும்.

சென்சிட்டிவ் ஸ்கின் இருப்பவர்களுக்கு வெந்நீரில் தொடர்ந்து குளிக்கும்போது கண்டிப்பாக அலர்ஜி போன்றவை ஏற்படும். மேலும் சுடு தண்ணீரில் தினமும் குளிப்பவர்களுக்கு இளமை தோற்றம் மாறி விரைவில் தோல் சுருக்கம் ஏற்படும். வெந்நீரில் குளித்து பழகி விட்டால் அதுக்கே அடிமையாகி விடுவார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் அவர்களுக்கு சேரவே சேராது.

ஆனால் உண்மை என்னவென்றால் நம் உடல் வெப்ப நிலைக்கு குளிர்ந்த நீரில் குளிக்கும் போது நல்ல பலனைக் கொடுக்கும். இரவு முழுவதும் தூங்கி எழும்பும் போது நம் உடம்பு சூடாக இருக்கும். அப்போது குளிர்ந்த நீரால் குளிக்கும் போது உடல் சூடு தணியும். உடல் சுறுசுறுப்பாகவும் இயங்கும். இரண்டு நாட்கள் குளிர்ந்த நீரில் குளித்து பார்த்தால் உங்களுக்கே மாற்றங்கள் கண்டிப்பாக தெரியும்.

admin

Recent Posts

தனிமையில் இருந்த பெண்… சொந்த வீட்டிலும் பாதுகாப்பில்லையா?… ஜன்னல் வழியே புக முயன்ற கொடூரம்… வைரலாகும் சிசிடிவி காட்சி…!!

நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…

4 minutes ago

இபிஎஸ்க்கு அல்டிமேட் டெஸ்ட்… விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை…. நாளை காத்திருக்கும் மெகா அரசியல் ட்விஸ்ட்…..!

தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும்…

5 minutes ago

“நட்புனா சும்மாவா?”…. இன்ஸ்டா, வாட்ஸ்அப் மூலம் இந்தியக் கடற்படையை வளைத்த பாகிஸ்தான் பெண் உளவாளிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!

சமூக வலைதளங்களில் தொடங்கும் ஒரு சாதாரண நட்பு, நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதை அண்மைய உளவு…

12 minutes ago

இதை உடனே பாருங்கள்..! இ-ஸ்கூட்டரும் இப்படி ஆகுமா?… லட்சக்கணக்கில் நஷ்டம்… கன்டெய்னருக்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீ… பதறியடித்து ஓடிய டிரைவர்…!!

இந்த விபத்திற்கான இழப்பீட்டுப் பொறுப்பு லாரி ஓட்டுநரைச் சேராது; வணிக ரீதியான சரக்குப் போக்குவரத்தில் இத்தகைய இழப்புகள் முழுமையாகக் காப்பீடு…

12 minutes ago

நிலநடுக்கத்தால் வந்த சோதனை…. டெல்லியில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்…. கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி…. நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

டெல்லியின் நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளே ஐந்து மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில்…

19 minutes ago

சென்னையில் அதிர்ச்சி…. டைடல் பார்க் அருகே சாலையில் திடீரென உருண்ட சொகுசு கார்…. வைரலாகும் பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

சென்னையில் உள்ள முக்கிய மற்றும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான திருவான்மியூர் டைடல் பார்க் அருகே, திடீரென சாலையில் பெரிய பள்ளம்…

26 minutes ago