Categories: சினிமா

இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்த 7 சிறந்த படங்கள்.. என்னென்ன தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன. இதில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்களும் அடங்கும் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்களும் அடங்கும். டாப் ஹீரோக்கள் முதல் அறிமுக ஹீரோக்கள் வரை அனைவரும் நடித்து வருகிறார்கள். இயக்குனர்களும் புதுவிதமான கதைகளத்துடன் படங்களை இயக்கி வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு வெளியான சில சிறந்த திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

லப்பர் பந்து:

அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லப்பர் பந்து. கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டது. குறிப்பாக விஜயகாந்த் ரசிகராக இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்திருப்பார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மகாராஜா:

இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியான படம் தான் மகாராஜா. கடந்த ஜூன் மாதம் வெளியான இந்த திரைப்படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி மற்றும் அம்தா மோகன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும் கதை தான் மகாராஜா. இந்தத் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கருடன்:

நடிகர் சூரி மற்றும் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கருடன். இந்த திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்திருந்த நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தின் பாதியில் சசிகுமாரை கொன்றுவிடா பிறகு ஹீரோவாக அவதாரம் எடுக்கும் சூரியன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வாழை:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் வாழை. அவருடைய நிஜ வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் திவ்யா துரைசாமி, நிகிலா விமல் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 90ஸ் நினைவுக்கு எடுத்துச் செல்லும் பல விஷயங்களை மாறி செல்வராஜ் படத்தில் அற்புதமாக காட்டி இருந்தார். இந்தத் திரைப்படமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

ப்ளூ ஸ்டார்:

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார். இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் மட்டும் திவ்யா துரைசாமி என பலரும் நடித்திருந்தனர். நட்பு, காதல் மற்றும் கிரிக்கெட் என அனைத்தையும் மையப்படுத்தி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

 

போகுமிடம் வெகு தூரம் இல்லை:

திருநெல்வேலியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பவன், ஆடுகளம் நரேன், விமல் மற்றும் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மைக்கேல் கே.ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார்.

ஜமா:

அறிமுக இயக்குனர் பாரி இளவழகன் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் தான் ஜமா. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் சேத்தன், அம்மு அபிராமி மற்றும் மணிமேகலை உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Nanthini

Recent Posts

“தற்குறிகள் ஆட்டம் ஆரம்பம்!” நடிகர் அருண் ராஜனின் வைரல் வீடியோ…! கொண்டாட்டமா…? அநாகரீகமா…? கொந்தளிக்கும் இணையவாசிகள்..!!

தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…

3 minutes ago

“தவெக தொண்டர்களிடம் பாய்ந்த போலீஸ்!.. நடுரோட்டில் வெடித்த மோதல்.. பட்டாசுகளை பிடுங்கி எறிந்த போலீஸ்.. திருப்பூரில் பரபரப்பு”..!!!

தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…

10 minutes ago

விஜய் அலையில் சிக்கிய ரஜினி டயலாக்…? ‘காலம் சொன்ன பதில்’ இதுதானா…? பஞ்ச் வசனத்தை வைலராக்கும் நெட்டிசன்கள்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…

13 minutes ago

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்… புதிய கூட்டணி அமைக்கிறார் விஜய்… வெளியானது ரகசியத் திட்டம்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…

37 minutes ago

கிங் ஆவாரா விஜய்…? தவெக கையில் ஆட்சியின் சாவி…? தமிழக அரசியலில் பரபரக்கும் “தொங்கு சட்டசபை..” முழு விவரம் இதோ….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…

39 minutes ago

BREAKING: கோட்டையை நோக்கி தளபதி?…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு விரைந்த திரிஷா..!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும்…

44 minutes ago