குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த அண்ணனைத் தொழில் தொடங்குமாறு கூறிய தம்பி, வாக்குவாதம் முற்றி அவரை அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கூலித் தொழிலாளியான 26 வயது ரஞ்சித் பவார், தனது மூத்த சகோதரர் கஜேந்திராவுக்கு வாழ்வாதாரத்திற்காக ஏதேனும் தொழில் செய்யுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்த வேளையில் இது தொடர்பாகப் பேசத் தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கிய இந்த உரையாடல், இருவருக்கும் இடையே கடுமையான தர்க்கமாக மாறி, இறுதியில் மோதலாக வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் தாக்கியதில் கஜேந்திரா உயிரிழந்ததாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
