ஆதார் வைத்திருப்போர் இதை மட்டும் செஞ்சிடாதீங்க…. மீறினால் சிறைத்தண்டனை & அபராதம் நிச்சயம்..!!

By Soundarya on ஆனி 8, 2025

Spread the love

ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான  ஒன்றாகும். ஒருவருடைய ஆதார் அட்டையில் வேண்டுமென்று தவறான பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் மற்றும் பிற தகவல்களை பதிவு செய்திருந்தால் அது கடுமையான குற்றமாகும். இது தவிர யாராவது வேறு ஒருவருடைய அடையாளத்தை தவறாக பயன்படுத்தினால் அல்லது போலி ஆவணங்களின் உதவியோடு ஆதார் பெற முயற்சித்தால் அவர் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.  வேறொருவரின் ஆதார் எண் அல்லது பயோமெட்ரிக் தரவை யாராவது பயன்படுத்தினால் இந்த குற்றம் இன்னும் தீவிரமாகும்.

ஆதார் சட்டம் 2016 மற்றும் ஐடி சட்டம் இரண்டின் கீழ் ஆதார் தவறாக பயன்படுத்துவதற்கான தண்டனைக்கு ஒரு விதி இருக்கிறது. அதன்படி பிரிவு 38 இந்த படி ஒருவர் தெரிந்தே வேறொருவரின் ஆதாரங்களை பயன்படுத்தினால் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பிரிவு 39 கீழ் அனுமதி இன்றி யாராவது ஆதார் தகவல்களை சேகரித்தாலோ அல்லது பகிர்ந்தாலோ 3 வருடங்கள்  தண்டனை விதிக்கப்படும். இதனால் வேறொருவருடைய ஆதார் பயன்படுத்த வேண்டாம். ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் படிவங்களில் தவறான தகவல்களை நிரப்ப வேண்டாம். போலி ஆவணங்களில் உதவியுடன் ஆதாரை பெற முயற்சிக்க வேண்டாம்.